குறைவான விந்தணுக்கள் பற்றி உங்களுக்குக் கவலையாக இருக்கிறது என்றால் இதுவே இறுதி நிலை என்று எண்ணி வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கருமுட்டை கருவுறுவதற்கு விந்தணு மிகவும் முக்கியமானது என்பதால் ஆரோக்கியமான விந்தணுக்களின் எண்ணிக்கை ஆண்களின் இனப்பெருக்க தன்மையில் அத்தியாவசிய பங்கு கொண்டுள்ளது. ஆனால் ஒருவேளை உங்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கை சராசரியை விடக் குறைவாக இருந்தால் அதனை இயற்கையான முறையில் மேம்படுத்தி இனப்பெருக்கத் தன்மையை அதிகரிப்பதற்கான இயற்கையான வழிகள் உள்ளன. சொல்லப்போனால் 15 சதவீத தம்பதியினர் ஆண் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இதில் கிட்டத்தட்ட 50 சதவீத காரணம் ஆண்களுக்கு ஏற்படும் குறைவான விந்தணு எண்ணிக்கையின் விளைவாக உண்டாகும் பிரச்சனை. வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் மருத்துவ ஆலோசனை மூலமாக பல ஆண்கள் தங்களுடைய விந்தணு தரத்தை உயர்த்தி, கருவுறுதலுக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளார்கள் என்பதே உங்களுக்கான நல்ல செய்தி. இயற்கையான முறையில் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் அதன் தடிமனை எப்படி அதிகரிப்பது என்பதை ஒரு சில ஆதாரப்பூர்வமான அணுகுமுறைகளின் மூலமாக இந்த பதிவில் பார்க்கலாம்.
விந்தணுக்களின் எண்ணிக்கை பற்றிய புரிதல்
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான வழிகளை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு சரியான விந்தணுக்களின் எண்ணிக்கை என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்வோம் உலக சுகாதார அமைப்பின்படி(WHO), சரியான விந்தணுக்களின் எண்ணிக்கை என்பது ஒரு மில்லி லிட்டரில் 15 முதல் 200 மில்லியன் விந்தணு ஆகும் இந்த எண்ணிக்கையை விட குறைவாக இருப்பது ஆலிகோஸ்பர்மியா (Oligospermia) என்று அழைக்கப்படுகிறது.
கருவுறுதலுக்கு தேவையான சரியான விந்தணுக்களின் எண்ணிக்கை
கருவுறுதல் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு வழக்கமாக ஒரு மில்லி லிட்டரில் 15 மில்லியன் விந்தணுவாவது குறைந்தபட்சம் இருக்க வேண்டியது அவசியம். அதிக விந்தணுக்களின் எண்ணிக்கை இருப்பது கருவுறுதல் வாய்ப்பினை அதிகரிக்கும் என்றாலும் கூட, குறைவான எண்ணிக்கையிலும் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.
குறைவான விந்தணு எண்ணிக்கைக்கான அறிகுறிகள்
பின்வரும் அறிகுறிகள் குறைவான விந்தணு எண்ணிக்கையை (மருத்துவ ரீதியாக ஆலிகோஸ்பர்மியா என்று அழைக்கப்படுகிறது) உணர்த்தக் கூடியவை:
- கருத்தரிப்பதில் சிக்கல்
- குறைவான விந்தணு
- அளவு
- விதைப்பையில் வீக்கம் அல்லது வலி
- முகம் அல்லது உடலில் குறைவான முடி
இது மாதிரியான அறிகுறிகளை நீங்கள் கண்டால் உங்களுடைய விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறதா என்பதை கண்டறிய உடனடியாக ஒரு மருத்துவரை ஆலோசிக்கவும்.
குறைவான விந்தணு எண்ணிக்கை ஏற்படுவதற்கான காரணங்கள்
குறைவான விந்தணு எண்ணிக்கை பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றி புரிந்து கொள்வது அதற்கான சிறந்த சிகிச்சை அளிப்பதற்கு மிகவும் முக்கியம். இந்த நிலை ஏற்படுவதற்கு பல்வேறு காரணிகள் இருக்கலாம்:
-
ஹார்மோன் சமநிலையின்மை: ஹைபோதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி அல்லது விதைப்பையில் சிக்கல்கள் இருப்பது விந்தணு உற்பத்திக்கு அவசியமான ஹார்மோன் அளவுகளை சீர்குலைக்கலாம்.
-
மரபணு காரணிகள்: குரோமோசோம் அசாதாரணங்கள் இருப்பது விதைப்பை செயல்பாட்டை பாதித்து அதனால் குறைவான விந்தணு உற்பத்திக்கு வழிவகுக்கலாம்.
-
மருத்துவ நிலைகள்: நீரழிவு நோய், நீர்க்கட்டிகள் அல்லது தாளம்மை போன்ற தொற்றுகள்.
-
சுற்றுச்சூழல் காரணிகள்: பூச்சிக்கொல்லிகள், கன உலோகங்கள் மற்றும் கதிர்வீச்சு போன்றவற்றிற்கு வெளிப்படுத்திக் கொள்வது விந்தணு ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கலாம்.
-
வாழ்க்கை முறை தேர்வுகள்:
-
உடற்பருமன்: அளவுக்கு அதிகமான உடல் எடை ஹார்மோன் மாற்றங்களுடன் தொடர்புடையதாக அமைகிறது. இது விந்தணு உற்பத்தியை குறைக்கலாம்.
-
புகைப்பிடித்தல்: புகையிலை பயன்படுத்துவது குறைவான விந்தணு எண்ணிக்கை மற்றும் மோசமான விந்தணு தரத்துடன் தொடர்பு கொண்டுள்ளது.
-
மதுபானம் மற்றும் போதை மருந்து பயன்படுத்துதல்: அளவுக்கு அதிகமாக மதுபானங்கள் மற்றும் கஞ்சா மற்றும் அனபாலிக் ஸ்டீராய்டுகள் போன்ற போதை மருந்துகளை பயன்படுத்துவது இனப்பெருக்க தன்மையை எதிர்மறையாக பாதிக்கலாம்.
-
வெப்பத்துக்கு வெளிப்படுத்துதல்: அடிக்கடி சூடான தண்ணீரில் குளியல் அல்லது இறுக்கமான உள்ளாடைகளை அணிவதால் விதைப்பையின் வெப்பநிலை அதிகரித்து அதனால் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படலாம்.
-
-
வயது: வயதான காலத்திலும் ஆண்களால் கருவுற முடியும் என்றாலும் கூட, பொதுவாக 40 வயதிற்கு பிறகு ஆண்களின் டெஸ்டாஸ்டரோன் ஹார்மோன் அளவுகள் குறைய துவங்குகிறது. இது விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது.
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் இயற்கையான வழிகள்
இயற்கையான முறையில் உங்களுடைய விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் ஒரு சில வழிகள் இதோ உங்களுக்காக:
- ஆரோக்கியமான உணவை சாப்பிடவும்:
சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (SFA) மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (PUFA) அதிகம் உள்ள உணவுகள் அல்லது ஒமேகா-6 ஒமேகா-3 PUFA விகிதம் சமநிலையாக இல்லாத உணவுகளை தவிர்க்கவும். ஏனெனில் அது விந்தணுவின் தரத்தை எதிர்மறையாக பாதிக்கும். அதற்கு பதிலாக ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த சரிவிகித உணவை சாப்பிடவும். இது உங்களுடைய விந்தணு ஆரோக்கியம் மற்றும் தரத்தை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தும். அந்த வகையில் உங்களுக்கு பலனளிக்கக்கூடிய சில உணவுகள் பின்வருமாறு:- பழங்கள் மற்றும் காய்கறிகள்: பெர்ரி பழங்கள், கீரை வகைகள் மற்றும் ப்ராக்கோலி போன்றவற்றில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது.
- நட்ஸ் வகைகள் மற்றும் விதைகள்: வால்நட் பருப்பு மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
- மெலிந்த புரதங்கள்: வஞ்சிரம் போன்ற மீன் வகைகள் மற்றும் கோழி இறைச்சி போன்றவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆதரவு தருகிறது.
- சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளுங்கள்:
சிங்க், வைட்டமின்கள் மற்றும் கோ என்சைம் Q10 போன்ற ஒரு சில சப்ளிமெண்ட்கள் விந்தணு தரத்தை உயர்த்தி, அதன் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. இது குறிப்பாக ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களுக்கு உதவக்கூடும். - தினமும் உடற்பயிற்சி செய்தல்:
மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சியில் ஈடுபடுவது ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும், டெஸ்டாஸ்டரான் அளவுகளை அதிகரிக்கவும் உதவும். இது விந்தணு உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. எனினும், தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடுவது விந்தணுவின் நகரும் தன்மை (விந்தணுக்களின் முன்னோக்கி நகரும் திறன்), அமைப்பியல் (விந்தணுக்களின் தோற்றம் மற்றும் வடிவம்) மற்றும் செறிவு (ஒரு மில்லி மீட்டர் விந்தணுவில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை) ஆகியவற்றை எதிர்மறையாக பாதிக்கும் என்று ஆய்வுகள் மூலமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே மிதமான அளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. - மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்:
அதிக மன அழுத்தம் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை ஏற்படுத்தி அதனால் விந்தணு வளர்ச்சிக்கு அவசியமான ஹார்மோன் உற்பத்தியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தியானம், யோகா அல்லது ஆழ்ந்த மூச்சு பயிற்சிகள் செய்வதன் மூலமாக உங்களுடைய மன அழுத்தத்தை குறைத்து அதன் மூலமாக உங்களுடைய இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். - தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்க்கவும்:
புகை பிடிப்பதை கைவிடுவது மற்றும் முடிந்த அளவு மதுபானங்கள் பருகுவதை குறைத்துக் கொள்வது உங்களுடைய விந்தணு தரத்தை உயர்த்துவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த இரண்டு பொருட்களுமே விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் நகரும் திறனுடன் தொடர்பு கொண்டு உள்ளன. அதுமட்டுமல்லாமல் கஞ்சா மற்றும் அனபாலிக் ஸ்டீராய்டுகள் போன்றவற்றையும் முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். - போதுமான அளவு தூக்கம் பெறவும்: ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன் சமநிலையை பராமரிப்பதற்கு தினமும் 7 முதல் 8 மணி நேரம் தரமான தூக்கம் அவசியம். மோசமான தூக்க அட்டவணையை பெற்றிருப்பது உங்களுடைய டெஸ்டாஸ்டரான் ஹார்மோன் அளவுகளை பாதித்து அதனால் இனப்பெருக்கத்திறன் மோசமாகும்.
- வெப்பத்துக்கு வெளிப்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும்: அதிகப்படியான வெப்பம் விதைப்பை வெப்பநிலையை அதிகரித்து அதனால் விந்தணு உற்பத்தி எதிர்மறையாக பாதிக்கப்படுகிறது. எனவே சூடான தண்ணீரில் குளிப்பதை முடிந்த அளவு தவிர்த்து விடுங்கள். அது மட்டுமல்லாமல் லேப்டாப்புகள், செல்போன்களை உங்களது மடியில் வைத்து பயன்படுத்த வேண்டாம்.
- தளர்வான, காற்று எளிதில் உள்ளே செல்லக்கூடிய உள்ளாடைகளை அணியவும்: உடலின் அடிப்படையான வெப்பநிலையை விட 2℃ குறைவான வெப்பநிலையிலேயே விந்தகங்கள் சரியான முறையில் வேலை பார்க்கும். நீங்கள் இறுக்கமான பேண்டுகள், உள்ளாடைகளை அணிந்தால் அது விரைப்பையின் வெப்பநிலையை அதிகரித்து, அதனால் விந்தணு மற்றும் டெஸ்டாஸ்டரான் ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. எனவே தளர்வான, காற்று எளிதில் உள்ளே சென்று வெளியேறக்கூடிய வகையிலான ஆடைகளை அணிவது உங்களுடைய விந்தணு ஆரோக்கியத்திற்கு தேவையான வெப்பநிலையை பராமரிக்க உதவும்.
- தீங்கு விளைவிக்கும் நச்சுகளுக்கு உங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள்: பூச்சிக்கொல்லிகள், பிளாஸ்டிக் மற்றும் சுத்தப்படுத்தும் ப்ராடக்டுகளில் காணப்படும் ஒரு சில கெமிக்கல்கள் மற்றும் நச்சுகள் விந்தணு தரத்தை பாதிக்கலாம். எனவே முடிந்த அளவு இது மாதிரியான பொருட்களை தவிர்த்து விட்டு ஆர்கானிக் ப்ராடக்டுகளை பயன்படுத்துங்கள். இயற்கையான சுத்தப்படுத்தும் ப்ராடக்டுகளை உபயோகிக்கவும். பிளாஸ்டிக் டப்பாக்களை தவிர்ப்பது நல்லது.
- பின்வரும் உடல் நலக் கோளாறுகளை கவனித்துக் கொள்ளுதல்: நாளப்புடைப்புப் புற்று வெரிகோசெல் – விரைப்பையில் பெரிதாக உள்ள நரம்புகள்), தொற்றுகள் அல்லது ஹார்மோன் சமநிலையின்மைகள் போன்றவை குறைவான விந்தணு எண்ணிக்கைக்கு காரணமாக அமையலாம்.
உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால் அதனை கண்டறிந்து, சிகிச்சை அளிக்கும் ஒரு கருவுறுதல் சிறப்பு நிபுணரின் ஆலோசனையை பெறவும்.
விந்தணுவின் தடிமனை அதிகரிப்பது எப்படி?
விந்தணுவின் தடிமனை அதிகரிப்பதற்கு நீங்கள் நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். தேவையான நீர்ச்சத்து கொண்ட உடலானது நல்ல தரமான விந்தணுவை உற்பத்தி செய்யும். மேலும் ஜிங்க் (சிப்பிகள்) நிறைந்த உணவுகளை சாப்பிடுவது விந்தின் தடிமனை அதிகரிக்கும்.
ஒரே இரவில் விந்தணுவின் பருமனை அதிகரிப்பது எப்படி?
ஒரே இரவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துவது கடினமான காரியம் என்றாலும் விந்தணு வெளியேறுவதற்கு முன்பு போதுமான அளவு தண்ணீர் பருகுவது மற்றும் விந்தணு சோதனைக்கு செல்வதற்கு முன்பு மதுபானங்கள் அல்லது பிற வகையான போதை மருந்துகளை எடுக்காமல் இருப்பது ஓரளவு மாற்றங்களை ஏற்படுத்தும். அதற்கான சில விரைவான குறிப்புகளை இப்பொழுது பார்க்கலாம்:
- முந்தைய நாள் அதிகளவு தண்ணீர் பருகவும்.
- உங்களை சோம்பேறித்தனமாக உணர வைக்கும் அதிக உணவுகளை தவிர்க்கவும்.
- உங்கள் உடல் செயல்பாடு சீராக இயங்குவதை உறுதி செய்ய போதுமான அளவு ஓய்வு எடுங்கள்.
விந்தணு தரத்தை உயர்த்துவது எப்படி?
விந்தணு தரத்தை உயர்த்துவதற்கு:
- அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய ஒரு சரிவிகித உணவை சாப்பிடுங்கள்.
- உங்களுடைய விந்தகங்கள் அதிகப்படியாக வெப்பமடைவதை தவிர்ப்பதற்கு தளர்வான உள்ளாடைகளை அணியுங்கள்.
- சுற்றுச்சூழல் நச்சுகளுக்கு உங்களை வெளிப்படுத்திக் கொள்ளாதீர்கள். (உதாரணமாக பூச்சிக்கொல்லிகள்)
விந்தணு ஆரோக்கியத்தில் உணவின் தாக்கம்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் நிறைந்த உணவை சாப்பிடும் ஆண்கள் தங்களுடைய விந்தணு எண்ணிக்கையில் 50 சதவீத அதிகரிப்பை அனுபவிப்பார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? வஞ்சிரம், வால்நட் பருப்பு மற்றும் ஆளி விதைகள் போன்ற உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஹார்மோன் அளவுகளை அதிகரித்து, அதன் மூலமாக விந்தணு உற்பத்தியை மேம்படுத்துகிறது.
விந்தணு உற்பத்திக்கு உதவும் கூடுதல் குறிப்பு:
சிங்க் என்பது தாரக மந்திரம்: டெஸ்டாஸ்டரான் உற்பத்தி மற்றும் ஒட்டுமொத்த இனப்பெருக்க ஆரோக்கியத்தில் சிங்க் முக்கிய பங்கு கொண்டுள்ளது. ஆண்கள் தினமும் குறைந்தபட்சம் 11 மில்லி கிராம் சிங்கை எடுத்துக் கொள்வது அவசியம். சிற்பிகள், பூசணி விதைகள் மற்றும் பருப்பு வகைகளில் சிங்க் அதிகமாக காணப்படுகிறது. இந்த உணவுகளை உங்களுடைய அன்றாட டயட்டில் சேர்ப்பது விந்தணுவின் தரம் மற்றும் அளவை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரிக்கும்.
தண்ணீர் குடித்தால் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்குமா?
தண்ணீர் குடிப்பது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதற்கு எந்த ஒரு நேரடி ஆதாரமும் இல்லை. ஆனால் உங்களுடைய ஒட்டுமொத்த ஆரோக்கியம் அதாவது இனப்பெருக்க ஆரோக்கிய உட்பட அனைத்திற்கும் உங்கள் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருப்பது அவசியம். எனவே நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் பருகுவது மற்றும் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்பட்டுள்ள பானங்களை தவிர்ப்பது போன்றவை சரியான விந்தணு உற்பத்திக்கு உதவும்.
பூஜ்ஜிய விந்தணு எண்ணிக்கை: அதிகரிப்பது எப்படி
பூஜ்ஜிய விந்தணு எண்ணிக்கை (அசோஸ்பெர்மியா) என்பது மருத்துவ உதவி தேவைப்படும் மிக மோசமான ஒரு நிலையாகும். இதற்கான சிகிச்சை ஆப்ஷன்கள் பின்வருமாறு:
- ஹார்மோன் சிகிச்சை
- உடற்கூறியியல் பிரச்சனைகளை சரி செய்ய அறுவை சிகிச்சை
- இன்ட்ராசைட்டோபிளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜெக்ஷன் (ICSI) கொண்டு செய்யப்படும் இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் (IVF) மாதிரியான இனப்பெருக்க தொழில்நுட்பங்கள்
தனிப்பட்ட சிகிச்சை தேர்வுகளை பெறுவதற்கு ஆண்களுக்கான சிறப்பு கருவுறுதல் நிபுணரின் ஆலோசனையை பெறுதல்.
முக்கிய குறிப்பு
விந்தணு எண்ணிக்கை மற்றும் தரத்தை உயர்த்துவது என்பது உணவு முறையில் தகுந்த மாற்றங்களைக் கொண்டு வருதல், தினசரி உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தத்தைத் திறம்பட நிர்வகித்தல், ஆபத்து விளைவிக்கும் பொருட்களைத் தவிர்த்தல் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறையின் அடிப்படையில் அமைகிறது.
பெற்றோராக ஒவ்வொருவரின் பயணமும் வேறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சரியான புரிதலும் போதிய ஆதரவும் இருந்தால் நீங்கள் உங்கள் கருத்தரிக்கும் தன்மையை மேம்படுத்தி கருத்தரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
எங்கள் மருத்துவரின் வாசகம்:
கருத்தரிப்பதில் சவால்களை எதிர்கொள்ளும் போது உணர்ச்சிவசப்பட்டு பதட்டம் அடைவது சகஜம் தான். ஆனால், நீங்கள் மட்டும் தான் அதை எதிர்கொள்கிறீர்கள் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். பல ஆண்கள் இந்நிலையை அனுபவிக்கிறார்கள். ஆதரவளிக்க பல வழிகள் உள்ளன. உங்கள் கருத்தரிப்பு நிபுணர் அல்லது மருத்துவரிடம் பேசுங்கள். நீங்கள் என்னென்ன செய்யலாம், என்னென்ன வழிகள் உள்ளன, எப்படி இந்த மோசமான நேரத்தை கடந்து வெளியே வரலாம் என்று அவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். ~ தீபிகா மிஸ்ரா
Leave a Reply