முன்னணி வெளியீடுகளில் இடம்பெற்றது
கருத்தரிப்பு மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத் துறையில் நிபுணத்துவத்திற்காக இந்தியா முழுவதும் அங்கீகரிக்கப்பட்டது
பிர்லா கருத்தரித்தல் மையம் & IVF, சேலம்
முதல் தடவை மையத்திற்கு வரும் தம்பதியருக்கு பெரும்பாலும் ஒரு தயக்கம் இருக்கும். என்ன பரிசோதனை செய்வார்கள், என்ன சொல்வார்கள் என்று. அதனால் முதல் சந்திப்பே அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.
எங்கள் அணுகுமுறை: நோயாளர்-மைய அனுபவம்
மருத்துவர் உங்கள் முழு மருத்துவ வரலாற்றையும், முன்பே எடுத்த பரிசோதனை அறிக்கைகள் இருந்தால் அதையும் பார்ப்பார். எல்லோருக்கும் ஒரே மாதிரி சிகிச்சை இங்கு நடக்காது. உங்களுக்கு எவ்வளவு செலவாகும், எத்தனை மாதம் ஆகும் என்பதை மறைக்காமல் முதலிலேயே சொல்வோம். நடுவில் திடீரென பெரிய பில் வந்து அதிர்ச்சி அடையக்கூடாது என்பதற்காக இதை செய்கிறோம். பணம் பிரச்சினையாக இருந்தால் 0% வட்டியில் EMI வசதியும் இருக்கிறது.
ஏன் நீங்கள் பிர்லா கருத்தரித்தல் மையம்-ஐ தேர்வு செய்ய வேண்டும்?
சேலத்தில் ஏராளமான கருத்தரிப்பு மையம் இருக்கத்தான் செய்கின்றன. அப்படியிருந்தும் நிறைய தம்பதியர் இந்த சேலத்தில் சிறந்த IVF கிளினிக்-ஐ தேர்வு செய்வதற்கு சில காரணங்கள் உண்டு:
- ஆலோசனை முதல் கர்ப்பம் உறுதி ஆகும் வரை எல்லாமே ஒரே மையத்தில் நடக்கும்
- மருத்துவர்கள் பல வருட அனுபவம் உள்ளவர்கள், சிக்கலான வழக்குகளையும் பதற்றமில்லாமல் கையாள்வார்கள்
- ஆய்வகம் நவீனமானது, முட்டை மற்றும் விந்தணு மாதிரிகள் தவறாமல் கண்காணிக்கப்படும்
- சிகிச்சை நேரம் முழுவதும் என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியும்
- மனரீதியாக கஷ்டமான பயணம் என்பதை தெரிந்து, தேவைப்பட்டால் ஆலோசகர் ஆதரவும் தொடர்ந்து தருவோம்
எங்கள் சேலம் IVF மையத்தில் கிடைக்கும் கருவுறுதல் சிகிச்சைகள் மற்றும் நோய் கண்டறிதல் சேவைகள்
ஆண் பக்கம் பிரச்சினையா, பெண் பக்கம் பிரச்சினையா, அல்லது இரண்டு பக்கமுமா என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அதனால் இருவரையும் பரிசோதிப்பதே சரியான தொடக்கம். கீழே எங்கள் மையத்தில் கிடைக்கும் சிகிச்சைகளின் விவரம்:
IVF (In Vitro Fertilization)
முட்டையையும் விந்தணுவையும் ஆய்வகத்தில் இணைத்து கருவை உருவாக்கி, அதை கருப்பையில் வைப்பது. வருடக்கணக்கில் முயற்சி பண்ணியும் பலனில்லாத தம்பதியருக்கு நல்ல தீர்வு.
IUI சிகிச்சை
கருமுட்ட நேரத்தில் சுத்திகரிக்கப்பட்ட விந்தணுவை நேரடியாக கருப்பைக்குள் செலுத்துவோம். அதிக தலையீடு இல்லாத எளிய முறை.
ICSI சிகிச்சை
ஆண்களின் விந்தணு தரம் குறைவாக இருந்தால், ஒரே ஒரு விந்தணுவை நேரடியாக முட்டைக்குள் செலுத்தி கரு உருவாக்குவோம்.
கருமுட்டை உறைய வைத்தல்
வேலை, படிப்பு அல்லது வேறு காரணங்களால் இப்போது கருத்தரிக்க விரும்பாத பெண்கள், இளம் வயதிலேயே முட்டைகளை உறைய வைத்து பாதுகாக்கலாம்.
பெண் கருவுறாமை
கருப்பை, கருமுட்டை, ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகளை கண்டறிந்து சரிசெய்யும் மகளிர் மருத்துவ நிபுணத்துவம்.
ஆண் கருவுறாமை
விந்தணு எண்ணிக்கை, இயக்கத்திறன் பிரச்சினைகளுக்கு விரிவான ஆண்டரோலஜி பரிசோதனை மற்றும் சிகிச்சை.
மீண்டும் மீண்டும் கர்ப்ப இழப்பு
மீண்டும் மீண்டும் கருச்சிதைவுக்கான காரணத்தை (மரபணு, உடற்கூறு, நோய் எதிர்ப்பு சக்தி) கண்டுபிடிக்க தனி பரிசோதனைகள்.
ஃபலோபியன் குழாய் அடைப்பு
அடைபட்ட ஃபலோபியன் குழாய் அடைப்பை லேப்ராஸ்கோபி மூலம் சரி செய்யலாம் அல்லது நேரடியாக IVF-க்கு போகலாம்.
AMH குறைவு
கருமுட்டை இருப்பை மதிப்பிடும் AMH பரிசோதனையின் அடிப்படையில் சரியான stimulation திட்டமிடல்.
PCOS
ஹார்மோன் சமநிலை, கருமுட்ட வெளியீட்டு கண்காணிப்பு மூலம் PCOS நிர்வாகம்.
எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis)
நாள்பட்ட இடுப்பு வலியை குறைத்து, இனப்பெருக்க பாதைகளை பாதுகாக்கும் சிகிச்சை.
கருப்பை நார்த்திசுக் கட்டி
கருப்பை சுவற்றில் உருவாகும் கட்டிகளை மருந்து அல்லது குறைந்த தலையீட்டு அறுவை சிகிச்சை மூலம் நிர்வகித்தல்.
சூல்பை நீர்க்கட்டி
கருமுட்டையில் உருவாகும் நீர்க்கட்டிகளை கண்காணித்து, தேவைப்படும் போது சிகிச்சை.
ஹார்மோன் சமநிலையின்மை
கருமுட்ட வெளியீடு, மாதவிடாய் சீரான தன்மையை கட்டுப்படுத்தும் ஹார்மோன் அளவுகளை சரிசெய்தல்.
எங்கள் பிர்லா கருத்தரிப்பு & IVF சேலம் மையத்திற்கு வருகை தரவும்
மையத்தை நேரில் பார்க்க வேண்டுமா அல்லது வருவதற்கு முன் விவரம் தெரிந்துகொள்ள வேண்டுமா? கீழே முழு விவரம்:
மையத்தின் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள்
பிர்லா ஃபெர்ட்டிலிட்டி & ஐவிஎஃப் (Birla Fertility & IVF), ஃபேர்லேண்ட்ஸ், சேலம், தமிழ்நாடு – 636016 | தொலைபேசி எண் – +91 7042823388 | வாட்ஸ்அப் எண் – +918833076699
அருகிலுள்ள பகுதிகள் நாங்கள் சேவை செய்கிறோம்
சேலம் மட்டுமின்றி, நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கரூர் ஆகிய அருகிலுள்ள பகுதிகளிலும் எங்கள் நோயாளர்களுக்கு தரமான கருவுறுதல் சேவைகள் வழங்கி வருகிறோம்.
மையத்தின் வசதிகள் மற்றும் நோயாளர் வசதிகள்
நவீன embryology, andrology லேபுகள், தனிப்பட்ட ஆலோசனை அறைகள், வசதியான காத்திருப்பு பகுதி இருக்கின்றன. தனியுரிமைக்காக ஆலோசனை அறைகளும் நடைமுறை அறைகளும் தனித்தனியாகவே வைக்கப்பட்டுள்ளன.
- நவீன IVF ஆய்வகம்
- அல்ட்ராசவுண்ட் மற்றும் கண்டறிதல் சேவைகள்
- தனிப்பட்ட ஆலோசனை அறைகள்
- மன ஆதரவு கவுன்சலிங் வசதி
- சுத்தமான, வசதியான காத்திருப்பு பகுதி
- சிறப்பு நோயாளர் உதவி சேவை
எங்கள் சேலம் IVF மையத்தை அடைவது எப்படி?
எங்கள் சேலம் மையம் Fairlands பகுதியில் அமைந்துள்ளது. நகரின் மையப் பகுதியிலிருந்து எளிதாக அடையலாம். பேருந்து, ஆட்டோ, கார் என எந்த வழியிலும் வரலாம். நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்தும் சாலை வழியாக வசதியாக வரலாம்.
பிர்லா கருத்தரிப்பு மையம் – கருவுறுதல் பராமரிப்பு பயணம்
சிகிச்சை படிப்படியாக எப்படி நடக்கும் என்று பார்க்கலாம். இது ஒரு தோராயமான ஓட்டம், உங்கள் நிலைமைக்கு ஏற்ப சிறிது மாறலாம்.
ஆரம்ப ஆலோசனை
மருத்துவ வரலாறு, வாழ்க்கை முறை, கவலைகள் எல்லாம் பேசுவோம். அவசரப்படாமல் கேள்வி கேளுங்கள்.
கருவுறுதல் மதிப்பீடு
AMH அளவு, விந்தணு பகுப்பாய்வு, ஹார்மோன் டெஸ்ட், அல்ட்ராசவுண்ட். இரு பங்காளிகளும் பரிசோதிக்கப்படுவார்கள்.
தனிப்பயனாக்கப்பட்ட சிகிச்சை திட்டமிடல்
பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் IUI, IVF அல்லது ICSI பரிந்துரைக்கப்படும்.
சிகிச்சை நடைமுறைகள்
கருமுட்டை தூண்டுதலிலிருந்து கரு மாற்றம் வரை ஒவ்வொரு படியும் நேரடி கண்காணிப்பில் நடக்கும்.
கர்ப்பகால கண்காணிப்பு மற்றும் தொடர் ஆதரவு
ரத்த பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் மூலம் கர்ப்ப ஆரோக்கியத்தை தொடர்ந்து பார்ப்போம். தேவைப்பட்டால் ஆலோசகர் உதவியும் தொடரும்.
சேலத்தில் IVF சிகிச்சை செலவு
IVF-க்கு எவ்வளவு ஆகும் என்ற கேள்வியை தவிர்க்க முடியாது. ஒரே பதில் கிடையாது, ஒவ்வொருவருக்கும் மாறும். தோராயமான யோசனைக்காக: IVF ஒரு சுழற்சிக்கு ₹1,71,000 முதல், ICSI ₹78,000 முதல், IUI ₹17,600 முதல் ஆரம்பிக்கிறது.
IVF செலவை பாதிக்கும் காரணிகள்
- வயது மற்றும் கருமுட்டை இருப்பு
- தேவைப்படும் பரிசோதனைகள் மற்றும் மருந்துகள்
- பரிந்துரைக்கப்படும் சிகிச்சை (IVF, ICSI அல்லது IUI)
- தேவைப்படும் சுழற்சிகளின் எண்ணிக்கை
- கருமுட்டை உறைதல் அல்லது மரபணு சோதனை போன்ற கூடுதல் சேவைகள்
நெகிழ்வான EMI மற்றும் கட்டண வசதிகள்
செலவு காரணமாக சிகிச்சையை தள்ளிப் போட வேண்டாம் என்பதற்காக 0% வட்டி EMI வசதி இருக்கிறது.
காப்பீடு மற்றும் நிதி வழிகாட்டுதல்
சிகிச்சை தொடங்குவதற்கு முன்பே முழுமையான கட்டண விவரங்களை தெளிவாக விளக்குகிறோம். தேவைப்படும் தம்பதியருக்கு காப்பீடு வழிகாட்டுதலும் தருவோம்.
சேலத்தை சுற்றியுள்ள பகுதிகள் நாங்கள் சேவை செய்கிறோம்
சேலம் மட்டுமல்ல, அருகிலுள்ள மாவட்டங்களிலிருந்தும் நோயாளர்கள் வருகிறார்கள். நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மற்றும் கரூர் போன்ற இடங்களிலிருந்தும் எங்கள் மையத்திற்கு வந்து சிகிச்சை பெறுகிறார்கள். இந்த பகுதிகளில் சிறந்த கருவுறுதல் சிகிச்சை தேடுபவர்களுக்கும் பிர்லா சேலம் மையம் ஒரு நம்பகமான தேர்வு.
முடிவுரை
பெற்றோர் ஆவதற்கான பயணம் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. சிலருக்கு சில மாதத்திலேயே நல்ல செய்தி கிடைக்கும், சிலருக்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும், இன்னும் கொஞ்சு பேருக்கு IVF, IUI மாதிரி சிகிச்சை தேவைப்படலாம். இது எதுவானாலும், தனியா சுமக்க வேண்டிய விஷயம் இல்ல.
சேலத்தில் சிறந்த IVF சிகிச்சை மையத்தை தேடுறவங்களுக்கு, Birla Fertility & IVF அனுபவம் மிக்க மருத்துவர் குழு, நவீன ஆய்வக வசதி, மற்றும் மறைவே இல்லாத கட்டண விவரங்களோட உங்க பக்கத்திலேயே இருக்கு. கேள்வி இருந்தா தயங்காம கேளுங்க, பயம் இருந்தா அதை மறைக்காம சொல்லுங்க. எங்க மருத்துவர் குழு உங்களோட இருந்து, ஒவ்வொரு அடியிலும் கை கொடுத்து நடக்கும்.
இன்றே ஒரு இலவச ஆலோசனை எடுத்துக்கொள்ளுங்க, உங்க கேள்விகளுக்கு தெளிவான பதில் கிடைக்கும்.
சேலத்தில் உள்ள எங்கள் IVF மையத்தில் வழங்கப்படும் மேம்பட்ட சிகிச்சைகள் மற்றும் நோயறிதல் சேவைகள்.
சேலத்தில் உள்ள பிர்லா ஃபெர்டிலிட்டி & IVF மையத்தில், ஒவ்வொரு தம்பதியினரின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பலதரப்பட்ட கருவுறுதல் சிகிச்சைகளை நாங்கள் வழங்குகிறோம். ICSI அல்லது IUI போன்ற எளிய செயல்முறைகள் முதல் IVF போன்ற சிக்கலான சிகிச்சைகள் வரை, உங்கள் இனப்பெருக்கப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் நிர்வகிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எந்தவொரு சிகிச்சையையும் பரிந்துரைக்கும் முன், நாங்கள் ஒரு முழுமையான நோயறிதலுடன் தொடங்குகிறோம்.

Uterine Fibroid
Treatment ranges from medication to minimally invasive surgery, which depends on the symptoms, size of the fibroid, and future pregnancy plans.

Male Infertility
Treatment depends on sperm count, motility, or hormonal factors to improve the chances of conception.

Cervical Cancer
Cervical cancer depends on the stage and may include surgery or therapy. Regular screening helps detect it early and improve outcomes.

IVF (In Vitro Fertilisation)
Eggs are fertilised with sperm in a laboratory and the resulting embryo is placed into the uterus.

PCOS (Polycystic Ovary Syndrome)
Managed using medication, diet, and ovulation support with to help with pregnancy.

Endometriosis Treatment
Managed through medication or laparoscopic surgery according to the severity to help with fertility outcomes.

Erectile Dysfunction
Managed with medication, lifestyle changes, or therapy. Treating the root cause restores confidence and sexual health.

Surrogacy
Surrogacy is a medically supervised process where another woman carries the pregnancy.

Ovarian Cysts
Monitored and treated with the help of medication like hormonal contraception to prevent new cysts for persistent, large, or painful cysts.

IUI (Intrauterine Insemination)
A simple, low-intervention fertility treatment where the washed sperm is placed directly to the uterus for pregnancy.
சேலத்தில் உள்ள பிர்லா ஃபெர்ட்டிலிட்டி மற்றும் ஐவிஎஃப் (IVF) மையம்
நகரம் முழுவதும் எளிதில் அணுகக்கூடிய வகையில் அமைந்துள்ள மருத்துவ மையங்கள்
Clinic Overview
Begin your parenthood journey with Birla Fertility & IVF, offering patient-first fertility care. As one of the best IVF Centres in Salem, we provide personalized treatment plans using advanced fertility technology. Our experienced Fertility Specialists in Salem offer expert IVF Treatment, IUI Treatment, ICSI Treatment, Male Infertility Treatment, Female Infertility Treatment, and Egg Freezing. As a leading Fertility Clinic in Salem, backed by 120+ fertility experts and 50+ clinics with 120,000+ IVF cycles completed and 2.3 lakh+ patients served. Enjoy transparent pricing and 0% EMI options. Proudly serving Salem, Namakkal, and Erode. Book your FREE consultation today.

சேலத்தில் உள்ள எங்கள் கருவுறுதல் நிபுணர் மற்றும் IVF நிபுணர்கள்
விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்
எங்களின் விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள், பிர்லா ஃபெர்டிலிட்டி & IVF நிறுவனத்தின் மருத்துவச் சிறப்பையும், நெறிமுறை சார்ந்த சிகிச்சை முறைகளையும், நோயாளி மையப்படுத்தப்பட்ட கருத்தரிப்பு பராமரிப்பிற்கான உறுதியான அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன. ஒவ்வொரு சாதனையும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கான சான்றாகும். மேலும், இந்தியா முழுவதும் மேம்பட்ட, வெளிப்படையான மற்றும் அக்கறைமிக்க இனப்பெருக்க சிகிச்சைகளை வழங்கும் எங்களின் தொடர்ச்சியான முயற்சியையும் வெளிப்படுத்துகிறது.
சேலத்தில் உள்ள பிர்லா கருவுறுதல் மற்றும் IVF மையத்தில் நோயாளிகளின் அனுபவங்கள்
Birla Fertility & IVF Center in Noida - Best IVF Centre
Fairlands, Salem, Tamil Nadu, 636016
568 Google Reviews
Write a review
பெற்றோராகும் பயணம்: உண்மையான வெற்றிக் கதைகள்
சேலத்தில் சிகிச்சைக்காக பிர்லா கருவுறுதல் மற்றும் IVF மையத்தை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?
உங்கள் குடும்பத்தைத் தொடங்க சரியான கருத்தரிப்பு மருத்துவமனையைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமான முடிவாகும். பிர்லா ஃபெர்டிலிட்டி & IVF-இல், தனிப்பட்ட பராமரிப்பு (Personalized Care) மற்றும் அனுபவமிக்க நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் உங்கள் கருத்தரிப்பு பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். எங்களின் அதிநவீன ஆய்வகங்கள் மற்றும் சிறந்த வெற்றி விகிதத்தின் மூலம் 2,30,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பெற்றோராகும் கனவை நனவாக்க உதவியுள்ளோம்.

100% வெளிப்படையான விலை நிர்ணயம்
உலகத் தரமான கருத்தரிப்பு சிகிச்சையை அனைவரும் எளிதில் பெறக்கூடியதாகவும் மலிவானதாகவும் மாற்ற நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். மறைமுகக் கட்டணங்கள் இல்லாத நிர்ணயிக்கப்பட்ட விலை (Fixed Price) கொண்ட ஆல்-இன்க்ளூசிவ் (All-inclusive) பேக்கேஜ்கள் மற்றும் 0% EMI வசதியையும் வழங்குகிறோம்.

சிறந்த கர்ப்பம் தரிக்கும் வெற்றி விகிதம்
120-க்கும் மேற்பட்ட கருத்தரிப்பு நிபுணர்கள், அதிநவீன எம்ப்ரியாலஜி ஆய்வகங்கள் மற்றும் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தின் மூலம் உயர்ந்த கர்ப்பம் தரிக்கும் வெற்றி விகிதத்தை வழங்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.

95% நோயாளர் திருப்தி மதிப்பெண்
தனிப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் மற்றும் விரிவான கருத்தரிப்பு சேவைகள் மூலம், ஒரே இடத்தில் தரமான மற்றும் நம்பகமான கருத்தரிப்பு சிகிச்சையை வழங்குகிறோம்.
சேலத்தில் உள்ள எங்கள் IVF மருத்துவமனையில் விரிவான கருத்தரிப்பு சேவைகள்?
மேம்பட்ட மரபணு மற்றும் நோயறிதல் சேவைகள்
கருத்தரிப்பு தொடர்பான பிரச்சினைகளைத் துல்லியமாகக் கண்டறிய PGT, PGD, DNA பரிசோதனை, AMH பரிசோதனை மற்றும் 3D அல்ட்ராசவுண்ட் போன்ற நவீன பரிசோதனை வசதிகள் உள்ளன. இதன் மூலம் ஒவ்வொரு நோயாளிக்கும் பொருத்தமான சிகிச்சைத் திட்டம் உருவாக்கப்படுகிறது.
கருத்தரிப்பு சிகிச்சைகள்
நாங்கள் IUI, IVF, ICSI, ஹிஸ்டெரோஸ்கோப்பி (Hysteroscopy) மற்றும் உறையவைக்கப்பட்ட கருவுறு மாற்று (Frozen Embryo Transfer - FET) உள்ளிட்ட நவீன மற்றும் பயனுள்ள கருத்தரிப்பு சிகிச்சைகளை வழங்குகிறோம்.
ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சை
குறைந்த விந்தணு எண்ணிக்கை (Low Sperm Count), வெரிகோசீல் (Varicocele), அசோஸ்பெர்மியா (Azoospermia), விறைப்புத்தன்மை குறைபாடு (Erectile Dysfunction) மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்ற ஆண்களின் இனப்பெருக்கப் பிரச்சினைகளுக்கு நிபுணத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.
முட்டை உறைபதன சேவை (Egg Freezing)
எதிர்காலத்தில் தாய்மையைத் திட்டமிட விரும்பும் பெண்கள், தங்களின் கருத்தரிப்பு திறனைப் பாதுகாக்க நவீன முட்டை உறைபதன (Egg Freezing) வசதியைப் பயன்படுத்தலாம்.
இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வு
PCOS மேலாண்மை, கருப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை (Cervical Cancer Screening) மற்றும் பாலியல் ஆரோக்கிய (Sexual Health) மதிப்பீடு போன்ற சிறப்பு சேவைகள் பெண்கள் மற்றும் ஆண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்த வழங்கப்படுகின்றன.
துணை நிபுணர் சேவைகள்
சிறந்த கருத்தரிப்பு முடிவுகளைப் பெற, உணவியல் நிபுணர்கள் (Dietitians), உட்சுரப்பியல் நிபுணர்கள் (Endocrinologists), உளவியல் நிபுணர்கள் (Psychologists) மற்றும் ஆலோசகர்கள் (Counsellors) அடங்கிய குழு முழுமையான ஆதரவு மற்றும் வழிகாட்டுதலை வழங்குகிறது.
உங்கள் சந்திப்பை பதிவு செய்யுங்கள்

Top IVF Centers in Popular Cities
- IVF Center in Delhi
- IVF Center in New Town Kolkata
- IVF Center in Gurgaon
- IVF Center in Rewari
- IVF Center in Lucknow
- IVF Center in Varanasi
- IVF Center in Gorakhpur
- IVF Center in Noida
- IVF Center in Prayagraj
- IVF Center in Meerut
- IVF Center in Kolkata
- IVF Center in Howrah
- IVF Center in Bhubaneswar
- IVF Center in Cuttack
- IVF Center in Surat
- IVF Center in Ahmedabad
- IVF Center in Ranchi
- IVF Center in Chandigarh
- IVF Center in Guwahati
- IVF Center in Raipur
- IVF Center in Jaipur
- IVF Center in Nagpur
- IVF Center in Hyderabad
- IVF Center in Indore
- IVF Center in Bhopal
- IVF Center in Kozhikode
- IVF Center in Kannur
- IVF Center in Mangalore
- IVF Center in Palakkad
- IVF Center in Thrissur
- IVF Center in Bangalore
- IVF Center in Kolar
- IVF Center in Mumbai
- IVF Center in Vijayapura
- IVF Center in Chennai
- IVF Center in Patna
- IVF Center in Perinthalmanna
- IVF Center in Siliguri
- IVF Center in Gachibowli
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
IVF (In Vitro Fertilization) என்பது மேம்பட்ட கருவுறுதல் சிகிச்சை முறையாகும். இதில் பெண்ணின் கருமுட்டைகள் சேகரிக்கப்பட்டு, ஆணின் விந்தணுவுடன் சிறப்பு ஆய்வகத்தில் கருவாக்கப்படுகின்றன. பின்னர் உருவான ஆரோக்கியமான கரு கருப்பைக்குள் மாற்றப்பட்டு கர்ப்பம் ஏற்பட உதவுகிறது.
ஃபலோபியன் குழாய் அடைப்பு, குறைந்த விந்தணு எண்ணிக்கை, ஒவுலேஷன் கோளாறுகள், எண்டோமெட்ரியோசிஸ், காரணம் தெரியாத கருத்தரிக்க முடியாமை, அதிக தாய்மை வயது அல்லது முந்தைய கருத்தரிப்பு சிகிச்சைகள் தோல்வியடைந்த தம்பதிகளுக்கு IVF சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.
IVF சிகிச்சையின் வெற்றி விகிதம் வயது, இனப்பெருக்க ஆரோக்கியம், கருவின் தரம் மற்றும் கருத்தரிப்பை பாதிக்கும் அடிப்படை காரணிகள் போன்ற பல அம்சங்களைப் பொறுத்தது. Birla Fertility & IVF சேலத்தில் உள்ள நிபுணர்கள் ஒவ்வொரு நோயாளியையும் தனித்தனியாக மதிப்பீடு செய்து, வெற்றிவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தனிப்பயன் சிகிச்சை திட்டத்தை உருவாக்குகின்றனர்.
பொதுவாக ஒரு IVF சிகிச்சைச் சுற்று 4 முதல் 6 வாரங்கள் வரை ஆகும். இதில் கருமுட்டை தூண்டுதல், கருமுட்டை சேகரித்தல், கருவாக்கம், கரு வளர்ச்சி, கரு மாற்றம் மற்றும் கர்ப்பப் பரிசோதனை ஆகிய அனைத்தும் அடங்கும்.
ஆம். IVF சிகிச்சையின் போது உருவாக்கப்படும் கருக்களை எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக பாதுகாப்பாக உறையவைத்து சேமிக்கலாம். இதனால் மீண்டும் மீண்டும் கருமுட்டை தூண்டுதல் செய்ய வேண்டிய அவசியம் குறையும்.
Birla Fertility & IVF சேலத்தில் IVF சிகிச்சை செலவு பொதுவாக ₹1.71 லட்சம் முதல் ₹4.17 லட்சம் வரை இருக்கலாம். சிகிச்சை முறை, மருந்துகள், நோயறிதல் பரிசோதனைகள், ஆய்வக செயல்முறைகள் மற்றும் கூடுதல் சேவைகள் போன்றவற்றைப் பொறுத்து செலவு மாறுபடும்.
IVF மையத்தைத் தேர்வு செய்யும்போது, கருவுறுதல் நிபுணர்களின் அனுபவம், ஆய்வகத் தரநிலைகள், வழங்கப்படும் சிகிச்சை முறைகள், நோயாளர் ஆதரவு சேவைகள், வெளிப்படையான கட்டண அமைப்பு மற்றும் தனிப்பயன் சிகிச்சை அணுகுமுறை போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டும்.
சரியான உடல் எடையை பராமரித்தல், சத்தான உணவு உட்கொள்ளுதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், புகைப்பிடித்தல் மற்றும் அதிக மதுபானப் பழக்கத்தைத் தவிர்த்தல், மனஅழுத்தத்தை கட்டுப்படுத்துதல் போன்றவை இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தி IVF சிகிச்சையின் வெற்றிவாய்ப்பை அதிகரிக்க உதவும்.
உங்கள் மருத்துவ வரலாறு, கருத்தரிப்பு தொடர்பான கவலைகள், தேவையான பரிசோதனைகள் மற்றும் உங்களுக்கு ஏற்ற சிகிச்சை முறைகள் குறித்து ஆலோசிக்க Birla Fertility & IVF சேலத்தின் கருவுறுதல் நிபுணர்களுடன் முன்பதிவு செய்து ஆலோசனை பெறலாம்.
ஆம். ஒவ்வொரு நோயாளியின் மருத்துவ வரலாறு, கருத்தரிப்பு மதிப்பீட்டு முடிவுகள், குடும்பத் திட்ட இலக்குகள் மற்றும் ஒட்டுமொத்த உடல்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தனிப்பயன் சிகிச்சை திட்டம் வழங்கப்படுகிறது.




































